வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சிவகங்கை , செவ்வாய், 7 மே 2024 (07:07 IST)

பிளஸ் 2 தேர்வு முடிவில் 23 ஆண்டுகளாக 100% தேர்ச்சியை தட்டிச்சென்ற- சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி

சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
 
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 226 மாணவர்களும் தேர்ச்சி அடைந்தனர். அப்பள்ளி அளவில் மாணவி சகானா 569 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்.
 
தீனதயாளன் 566 மதிப்பெண்களுடன் 2-வது இடம், ஜீமானாஅசின் பாத்திமா 560 மதிப்பெண்களுடன் 3-வது இடம் பெற்றனர்.
 
மேலும் 500 மதிப்பெண்களுக்கு மேல் 35 மாணவர்கள் பெற்றனர். 
 
கணினி அறிவியல், பொருளியியலில் தலா ஒரு மாணவர் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றார். 
 
சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளிச் செயலர் சேகர் பாராட்டினார். மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு தொடர்ந்து 100% தேர்ச்சி பெற்று வந்த நிலையில் இந்தாண்டும் பிளஸ் 2  தேர்வில் 23 ஆண்டுகளாக 100% தேர்ச்சியை சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது