1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 14 ஆகஸ்ட் 2021 (09:19 IST)

பாலியல் சீண்டல்: சிவசங்கர் பாபா உட்பட 4 பேர் மீது குற்றபத்திரிக்கை தாக்கல்!

சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை சேர்ந்த மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து கடந்த ஜீன் மாதம் 16 தேதி சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபா மீது மீண்டும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு  சிபிசிஐடி போலீசார் அவரை இரண்டாவது முறையாக கைது செய்தனர். 
 
சிவசங்கர் பாபா மீது 2 போக்சோ வழக்குகள் பாய்ந்துள்ள நிலையில் இதுவரை 40 சாட்சிகளின் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 59 நாட்களில் சிபிசிஐடி போலீசார் 300 பக்கங்கள் கொண்ட குற்றப்த்திரிக்கையை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதையடுத்து சிவசங்கர் பாபா உட்பட ஆசிரியைகள் பாரதி, சுஷ்மிதா, தீபா  4 பேர் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.