தண்ணீரை மட்டுமே பருகி வரும் மௌன சாமியார் ! மக்கள் ஆச்சர்யம் !
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் என்ற பகுதியில்,சாமியார் ஒருவர் தொடர்ந்து 13 நாட்களாக தண்ணீர் பருகி மௌன விரதம் இருந்து பூஜை செய்து வருகிறார்.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் தனக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 10 அடி சுற்றளவு குழியைவெட்டி,அதில், பாதாள லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.
பின்னர், தொடர்ந்து 12 நாட்களாக குழிக்குள் அமர்ந்து, தண்ணீர் மற்றும் நீர் ஆகாரம் மட்டுமே அருந்தி மவுன விரதம் இருந்து வருகிறார்.
நிஜ ஆனந்த காசி விஸ்வநாத சுவாமிகள் என்று அழைக்கப்படும் இவர், இன்று 13 வது நாளாகத் தொடர்ந்து, லிங்கத்தை அகங்கரித்து சிறப்பு பூஜை செய்து வருகிறார்.. இந்த சம்பவம் அருகில் உள்ள பகுதிகளில் பரவியதை அடுத்து மக்கள் ஆர்வத்துடன் அப்பகுதிக்கு வந்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிறது