1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Third front without congress and bjp by mamtha

காங்கிரஸ், பாஜக இல்லாத மாற்று அணி: மம்தாவை சந்தித்த குமாரசாமி..!

காங்கிரஸ்
காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத மூன்றாவது மாற்று அணியை அமைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரை கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி திடீரென சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி சந்தித்தார். காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை மம்தா பாலாஜி உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே இந்த அணியை உருவாக்க அகிலேஷ் யாதவ், நவீன் பட்நாயக் ஆகியோரை மம்தா சந்தித்த நிலையில் தற்போது குமாரசாமியையும் சந்தித்துள்ளது அரசியல் உலகில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் விரைவில் மூன்றாவது அணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரசுடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கும் திமுக இந்த கூட்டணியில் சேருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் - வலுத்த போராட்டம்!