1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2020 (13:58 IST)

சுட்டுக் கொல்லப்பட்ட எஸ். ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் ! முதல்வர் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காவல் உதவி ஆய்வாளராக பணியார்றி வந்த வில்சன் என்பர் நேற்று முந்தினம் இரவு 9.45 மணியளவில் சுட்டுக்கொள்ளப்பட்டார். களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து கேரளா செல்லும் அணுகுசாலையில் காவல்துறை சோதனைச் சாவடியில் இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து பார்த்ததில் காவலரை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் 2 பேரின் புகைப்படங்களை கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது. 2 பேரில் ஒருவனின் பெயர், அப்துல் ஷமீம் என்றும், இன்னொருவனின் பெயர் தவுபீக் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. 
 
அதோடு தமிழக அரசு வில்சனின் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும், உரிய நிவாரண உதவி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  களியக்காவினையில் பணியின் போது சுட்டுக் கொல்லப்பட்ட காவல் உதவு ஆய்வாளர் வில்சனின் குடும்பத்திற்கு ரூ. 1கோடி நிதி வழங்க்கப்படும் என அறிவித்துள்ளார்.