வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 17 ஜூன் 2023 (22:16 IST)

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி

muthusamy
சமீபத்தில் தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சமீபத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

செந்தில் பாலாஜி மீது வழக்கு உள்ளதால் அவர் கவனித்து வந்த துறைகள்  அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு மாற்றி ஒதுக்கி முதல்வர் பரிந்துரை செய்ததற்கு சமீபத்தில் தமிழக ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்திருந்தார்.

இருப்பினும் செந்தில்பாலாஜி அமைச்சரவையில் தொடர்வதற்கு ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கூடுதல் இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
thangam thennarasu

மேலும், செந்தில் பாலாஜியின் கைதான நிலையில், அவர் வசமிருந்த  துறைகள் வேறு 2 அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள  நிலையில்,  துறை இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர  நிர்வாக ரீதியிலான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.