வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (14:14 IST)

தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளை மூடி விடலாமே? உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்.!!

Madurai Court
தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளையும் மூடி விடலாமே என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக கேள்வி எழுப்பிள்ளது.
 
தமிழகத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு வந்தபோது,  சட்டக் கல்லூரிகளில் மாணவர்கள், பேராசிரியர்கள் விகிதம், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் குறித்து நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 
 
தமிழகத்தில் 7 அரசு சட்டக் கல்லூரிகளில் முதல்வர் இல்லை என்றும் பல கல்லூரிகளில் அடிப்படை வசதிகளே இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளையும் மூடி விடலாமே? என காட்டமாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புதிய சட்டக் கல்லூரிகளை திறந்தால் போதுமா? தேவையான பேராசிரியர்களை நியமிக்க வேண்டாமா? என்று ஆவேசம் தெரிவித்தனர்.

 
அரசு சட்டக் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இது குறித்து உயர்கல்வித் துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய ஆணையிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.