செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 8 ஜூன் 2021 (12:24 IST)

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை - தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்?

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக மதுரை, கோவை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தற்காலிகமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தம். 

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பல்வேறு இடங்களில் அரசே முகாம் அமைத்து தடுப்பூசிகள் செலுத்தி வரும் நிலையில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை எழுந்துள்ளது.
 
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக மதுரை, கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தற்காலிகமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தற்போது தான் கொரோனா தடுப்பூசி மீதான அச்சம் விலகி ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் நிலையில் தடுப்பூசி இல்லாதது மக்களை ஏமாற்றம் அடையச்செய்துள்ளது.