வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 7 ஜூன் 2021 (08:02 IST)

சீனாவிடம் 10 லட்சம் கோடி டாலர் இழப்பீடு கேட்க வேண்டும்: டிரம்ப்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனா தான் காரணம் என்றும் எனவே சீனாவிடம் இழப்பீடு கேட்க வேண்டுமென முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சீனாவிலும் என்ற வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பினால் நாடு முழுவதும் பரவி அதன் பின் உலகம் முழுவதும் பரவியது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கான உயிர்கள் இழந்ததோடு பல்லாயிரக்கணக்கான கோடி பொருளாதாரம் சீரழிந்து என்பது குறிப்பிடத்தக்கது
 
உலக நாடுகள் முழுவதும் பொருளாதாரத்தில் பின்னடைவு அடைவதற்கு இந்த கொரோனா தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனா தான் கொரோனா வைரசை உலகம் முழுவதும் பரப்பியது என்றும், எனவெ அந்நாட்டிடம் உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து இழப்பீடு கேட்க வேண்டும் என்றும் சீனாவிடம் பத்து லட்சம் கோடி டாலர் இழப்பீடு பெற அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது