செவ்வாய், 11 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 மார்ச் 2025 (14:52 IST)

தமிழ் பெயர் பலகை இல்லா கடைகள்! உரிமத்தை ரத்து செய்ய முடிவு? - சென்னை மாநகராட்சி அதிரடி!

Chennai Shops

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில் தமிழில் பெயர் பலகைகள் வைக்காமல் இருந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மாநகராட்சி நிர்வாகம் புதிய முடிவை எடுத்துள்ளது.

 

சென்னை மாநகராட்சியில் 70 ஆயிரம் உரிமம் பெற்ற கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பல கடைகளில் ஆங்கில, இந்தி பெயர் பலகைகள் பெரிதாகவும், தமிழ் மொழியில் சிறியதாகவும் கடை பெயரை குறிப்பிட்டுள்ளனர். ஆனால் விதிமுறைகளின்படி, தமிழ் எழுத்தை பெரிதாக முதலில் குறிப்பிட்டு அதன் பின்னர் சிறிய எழுத்துகளில் பிறமொழிகளில் எழுத வேண்டும் என உள்ளது. மேலும் சில கடைகளில் தமிழ் மொழியிலேயே கடைப்பெயர் எழுதப்படவில்லை என்ற புகார்களும் இருந்து வருகிறது.

 

 

இந்நிலையில் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்ட சென்னை மாநகராட்சி, உரிமம் பெற்ற அனைத்து கடைகளுக்கும் தமிழில் பெயர் பலகை அமைப்பது குறித்த சுற்றறிக்கையை அனுப்ப முடிவு செய்துள்ளது. நோட்டீஸ் அனுப்பிய 7 நாட்களுக்கு பெயர் பலகை சரி செய்யப்படாவிட்டால் கடையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செயவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

சென்னையில் மட்டுமல்லாமல் மதுரை, திருச்சி, சேலம் என முக்கிய நகரங்கள் பலவற்றிலும் தமிழில் கடைகளின் பெயர் பலகை அமைக்க வேண்டும் என்றும், பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K