1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Shops closed in Namakkal district

நாமக்கல் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு....

Shops closed i
நாமக்கல் மாவட்டத்தில் கொரொனா தொற்றைத் தடுக்க அம்மாவட்ட நிர்வாகம் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக குறைவது போலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
.
விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு  மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொரொனா பரவலைத் தடுக்க நாமக்க மாவட்டத்தில் தினமும் மாலை 5 மணிக்குள் கடைகள் மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், இந்தியாவில் கொரொனா 3 வது அலை வரும் ஆகஸ்ட் மாதம் கடைசியில் ஆரம்பித்து, அக்டோபர் மற்றும் நவம்பர் மாத தொடக்கத்தில் உச்சம் அடைய அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை