செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 26 ஜூன் 2022 (11:31 IST)

வேட்டைக்கு வந்த மர்ம நபர்கள்: முயலை சுட்ட குண்டு பெண் மீது பாய்ந்ததால் பரபரப்பு

gun
வேட்டைக்கு வந்த மர்ம நபர்கள் முயலை நோக்கி சுட்டபோது அந்த குண்டு தவறி பெண் மீது பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வலசை கிராமத்தில் மர்ம நபர்கள் சிலர் வேட்டைக்கு வந்ததாக தெரிகிறது. அவர்கள் முயல் வேட்டை செய்து கொண்டிருந்தபோது முயலை நோக்கி சுட்ட துப்பாக்கி குண்டு ஒன்று அந்த பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பெண் மீது பாய்ந்தது 
 
இதனை அடுத்து அந்தப் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேட்டைக்கு வந்தவர்கள் நாட்டுத் துப்பாக்கியால் முயல் வேட்டை செய்து கொண்டிருந்ததாகவும் அவர்கள் சுட்ட துப்பாக்கியை குண்டு சாந்தகுமாரி என்ற பெண் மீது பட்டுவிட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது 
 
இதனை அடுத்து காயமடைந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்டைக்கு வந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்