திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2024 (17:28 IST)

கள்ளழகர் திருவிழா காரணமாக தேர்வுகள் ஒத்திவைப்பு! முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு..!

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
 
மதுரையில் சித்திரை திருவிழா என்பது உலகப் புகழ்பெற்றது என்பது இந்த திருவிழாவை காண தமிழகத்திலிருந்து மட்டும் என்று வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்திரை திருவிழா நடக்கும் நாட்கள் முழுவதுமே மதுரையில் ஒரே கொண்டாட்டமாக இருக்கும் என்பதும் ஒரு சில முக்கிய நாட்களில் மதுரையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று   நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறும் என்றும் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Edited by Mahendran