வியாழன், 30 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified சனி, 4 பிப்ரவரி 2023 (18:16 IST)

வேட்புமனுவை வாபஸ் பெற்ற செந்தில் முருகனுக்கு புதிய பதவி: ஓபிஎஸ் அறிவிப்பு

ops admk
வேட்புமனுவை வாபஸ் பெற்ற செந்தில் முருகனுக்கு புதிய பதவி: ஓபிஎஸ் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் அணியின் சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த செந்தில் முருகன் சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இன்று அவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். 
 
அதிமுகவின் ஒருங்கிணைந்த வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டதை அடுத்து ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்ற செந்தில் முருகனுக்கு ஓபிஎஸ் புதிய பதவி அளித்துள்ளார். அவருக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து இன்று முதல் அவர் ஓபிஎஸ் பிரிவு அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பணிபுரிவார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சிவப்பிரசாத், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா, ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran