புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 நவம்பர் 2018 (08:14 IST)

கஜா புயலுக்காக செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி செய்த வேலை: கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

கஜா புயலுக்காக உதவிய நம் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமியை நெட்டிசன்கள் கிண்டலடித்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் உருகுலைந்து போயுள்ளனர். கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. அவர்களுக்கு தமிழகமெங்குமிலிருந்து உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் விஜய் டிவி புகழ் செந்தில்கணேஷ் - ராஜலட்சுமி புயலால் பாதித்த மக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கினர். மக்களை நேரில் சென்று பார்த்து அவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர்.
 
இதற்கிடையே இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் 3 ரூபா டைகர் பிஸ்கட்டா என கிண்டலத்துள்ளனர். ஒன்னு உதவி பண்ணனும் இல்லனா உதவி பண்றவங்கள கிண்டல் பண்ணாம இருக்கனும் இவன மாதிரி ஆளுங்கல என்ன சொல்வதென்றே தெரியவில்லை.