1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Updated : வியாழன், 22 நவம்பர் 2018 (18:31 IST)

கஜா புயல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு லாரன்ஸ் அறிவித்த மிகப்பெரிய உதவி

கஜா புயலால் தமிழகத்தின் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர் உள்பட ஆறு மாவட்டங்கள் மிக மோசமா பாதிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் மக்கள் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். பலர் வீடுகளை இழந்தும், வாழ்வாதாரத்தை இழந்தும் தவித்து வருகிறார்கள். இவர்களுக்கு தன்னார்வக்குழுவினர் பலர் உதவிகளை செய்து வருகிறார்கள். அரசும் நிவாரண உதவிகளை செய்து வருகிறது. திரை உலகினர் பலர் தங்களால்  இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.
 
ரஜினி, கமல், விஜய், சூர்யா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் பல ஹீரோக்கள் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.
 
இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தான் வீடு இழந்த 50 குடும்பத்திற்கு வீடு கட்டித்தரப்போவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஒரு குடிசை வீடு கட்டி தர 1 லட்சம் ஆகும், அதுபோல 50 வீடுகள் கட்டப்போவதாக அவர் கூறியுள்ளார்.