செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 11 ஜனவரி 2023 (13:06 IST)

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சோலார் திட்டம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

solar
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் சோலார் திட்டம் செயல்படுத்தப்படும் என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் சோலார் திட்டத்தை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக சட்டப்பேரவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார். 
 
அதுமட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் சோலார் மூலம் மின் உற்பத்தி செய்யும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் சோலார் மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை தமிழக அரசு கொண்டுவர இருப்பதற்கு பாராட்டுக்கள் புகுந்து வருகிறது
 
Edited by Siva