திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 26 மே 2023 (14:04 IST)

எனது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

Senthil Balaji
எனது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை என்றும், இது போன்ற சோதனைகளை நாங்கள் எதிர்கொள்வது புதிதல்ல என்றும் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 
 
மேலும் எனது சகோதரர் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி அதிகாரிகள் உள்ளே சென்ற வீடியோ எனக்கு வந்துள்ளது, அதை பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்,. 
 
மேலும் எத்தனை நாட்கள் சோதனை நடத்தினாலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்புத் தரப்படும் என்றும்,  2006ம் ஆண்டு தொடங்கி இன்று வரை நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் எந்த சொத்தையும் வாங்கவில்லை என்றும் செந்தில் பாலாஜி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 
Edited by Siva