1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified வெள்ளி, 26 மே 2023 (13:21 IST)

நிறுத்தப்பட்டிருந்த ஐடி சோதனை மீண்டும் தொடங்கியது: 3 வாகனங்களில் காவலர்கள் பாதுகாப்பு..!

கரூரில் ருமானவரித்துறை சோதனை நிறுத்தப்பட்டதாக சற்றுமுன் செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த சோதனை மீண்டும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. 
 
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 
 
சென்னை கோவை கரூர் ஆகிய பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வரும் வகையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனை நடந்த போது திமுக தொண்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வருமானவரி சோதனைக்கு வந்த அதிகாரி ஒருவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனை அடுத்து வருமான வரி இது துறை அதிகாரிகள் சோதனையை நிறுத்திவிட்டு எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். 
 
மேலும் திமுக தொண்டர்கள் மீது வருமானவரித்துறை அதிகாரிகள் புகார் அளித்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் நிறுத்தப்பட்ட வருமானவரி சோதனை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. 3 வாகனங்களில் காவலர்கள் பாதுகாப்புடன் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran