வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 26 மே 2023 (08:04 IST)

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ஐ.டி. ரெய்டு: பரபரப்பு தகவல்..!

Senthil Balaji
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர் என்பதும் குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 200 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னை கோவை கரூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழக முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் போது அவருடைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவது பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
Edited by Siva