1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. bank fraud person arrested after 20 years

வங்கி மோசடி செய்து இறந்ததாக அறிவிக்கப்பட்டவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் கைது..!

Arrest
வங்கியில் கடன் வாங்கி அந்த கடனை செலுத்தாமல் இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஒருவர் 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஹைதராபாத் வங்கியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் 50 லட்ச ரூபாய் கடன் வாங்கிய சலபதி ராவ் என்பவர் மீது வங்கி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் திடீரென 2004 ஆம் ஆண்டு தளபதி ராவ் தலைமறைவானதாக கூறப்பட்டது.

 இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு தனது கணவர் 7 ஆண்டுகளாக வீடு திரும்பவில்லை என்பதால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கக்கோரி அவருடைய மனைவி நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டு சலபதி ராவ் இறந்து விட்டதாக அறிவித்தது. இதனை அடுத்து வங்கியில் கடன் வாங்கியவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருடைய கடன் வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டதில் ஹைதராபாத்தில் இருந்து சலபதி ராவ் தமிழகத்திற்கு தப்பி சென்று விட்டதாகவும் அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் தெரியவந்தது. மேலும் ஆதார் எண் ஆதாரமும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர் செய்த நிலையில் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து சலபதி ராவ் மீதான வங்கி மோசடி வழக்கு மீண்டும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 
 
அடுத்த கட்டுரையில்
வங்கதேசத்தில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் இந்தியா நோக்கி வரும் கைதிகள்?? - அதிர்ச்சி தகவல்!