Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி சகோதரர் கைது செய்யப்பட்டாரா? வதந்தியை பரப்பியது யார்?

Written By Siva
Updated: திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (07:33 IST)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகி உள்ள நிலையில் அவருடைய சகோதரர் அசோக்குமார் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தலைமறைவாக இருக்கிறார் என்பதும் அவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வழக்கு முடிவடைவதற்கு முன்பே அசோக்குமாரை கைது செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமலாக்க துறையினரே செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் அவர் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் வதந்தியை கிளப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி ஒரு வதந்தி கிளம்பினால் அவரது ஆதரவாளர்கள் பதற்றம் ஆகி அவருடன் தொடர்பு கொள்ளும்போது அந்த போன் நம்பரை வைத்து செந்தில் பாலாஜி சகோதரரை கண்டுபிடித்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த திட்டம் பலிக்கவில்லை என அமலாக்கப்பிரிவு தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

ALSO READ: திருச்செந்தூர் கடலுக்கு அடியில் பிரம்மாண்ட சுவர்.. கடல் நீர் உள் வாங்கியதால் கண்டுபிடிப்பு..!

Edited by Siva
 

எல்லாம் காட்டு

தவெக எம்.எல்.ஏக்கள் மன்னர் பரம்பரை அல்ல!.. உதயநிதி Vs ஆதவ் அர்ஜுனா மோதல்!...

அண்ணாமலைக்கும் உதயநிதிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.. நெட்டிசன்களின் பதிவுகள் வைரல்..

2,500 நிரந்தர செவிலியர் பணியிடங்கள் .. தவெக அரசு அதிரடி அறிவிப்பு...

30 வயது இருந்தால் போதும்.. எல்லா மருத்துவ பரிசோதனைகளும் இலவசம்.. தவெக அரசு அதிரடி...

ஒரே ஒரு நாள் அமைச்சர்கள் தங்கள் குழந்தைகளை கிராமப்புற பள்ளிக்கு அனுப்பி பாருங்கள்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

அடுத்த கட்டுரையில்
Show comments