திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (19:18 IST)

மகளுக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு தூக்கு தண்டனை!

hang
பெற்ற மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை கொடுத்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது
 
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்தது சாட்சியங்களுடன் உறுதிசெய்யப்பட்டது 
 
இதனையடுத்து மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
 
இருவர் மீதும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்