1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: வெள்ளி, 7 நவம்பர் 2025 (18:00 IST)

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...
அதிமுகவில் முன்னாள் அமைச்சராகவும், கட்சியின் பல பொறுப்புகளிலும் இருந்தவர் செங்கோட்டையன். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தனித்து செயல்பட்டதால் அவரை கட்சியிலிருந்து நீக்கினார் பழனிச்சாமி. எனவே, செங்கோட்டையன் எனவே டெல்லி சென்று அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர் சந்தித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் போன்ற எல்லோரையும் ஒன்றிணைத்து அதிமுகவை வலுவாக்கி திமுகவை தோற்கடிக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது. ஆனால், பழனிச்சாமிக்கு அதில் விருப்பமில்லை. எனவே அந்த அசைன்மென்ட்டை அவர்கள் செங்கோட்டையனிடம் கொடுத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் அப்போது செங்கோட்டையன் எதுவும் சொல்லவில்லை.
 
ஒருபக்கம் செங்கோட்டையனை மட்டுமில்லாமல் அவரின் ஆதரவாளர்கள் 12 பேரையும் அதிமுகவிலிருந்து இன்று உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னது பாஜகதான் என ஓபனாக பேசியிருக்கிறார். ‘
என்னோடு யார் பேசினாலும் உடனே அவர்களை அதிமுகவிலிருந்து நீக்கி விடுகிறார்கள். இப்படியே போனால் அதிமுக அமாவாசை ஆகிவிடும்.
 
எல்லோரையும் அரவணைத்து செல்லும் நிலையில் அதிமுக இல்லை. எடப்பாடி பழனிச்சாமிதான் என்னை அமைச்சராக்கியதாக சொல்லி இருக்கிறார். என்னை போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால் அவர் முதல்வராகவே ஆகியிருக்க மாட்டார். ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்டவர் ஓபிஎஸ் மட்டுமே. கொல்லைப்புறமாக முதல்வரானவர்தான் பழனிச்சாமி. அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என என்னிடம் கூறியது பாஜகதான்’ என பேசியிருக்கிறார்.