புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 ஜனவரி 2020 (11:43 IST)

நஷ்டத்தில் காலத்தை ஓட்டும் அம்மா உணவகம்: கண்டுகொள்ளுமா ஈபிஎஸ் அரசு?

ரூ.4 கோடி வருவாய் குறைந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது அம்மா உணவகம். 
 
கடந்த 2012 ஆம் ஆண்டு ஏழை எளியோர் மலிவு விலையில் சாப்பிட அம்மா உணவகங்களை தொடங்கினார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதில் இட்லி ஒன்று ஒரு ரூபாய், சாம்பார் சாதம் ஒன்று ஐந்து ரூபாய், தயிர் சாதம் ஒன்று மூன்று ரூபாய், இரண்டு சப்பாத்தி மூன்று ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
 
இந்நிலையில், சென்னையில் இயங்கிவரும் அம்மா உணவகங்கள் ரூ.4 கோடி வரை வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2017- 2018 ஆம் ஆண்டில் அம்மா உணவகங்களில் விற்பனை மூலம் மாநகராட்சிக்கு 28 கோடியே 29 லட்சம் வருவாய் கிடைத்தது. ஆனால் 2018 -19 ஆம் ஆண்டில் இந்த வருவாய் ரூ.4 கோடி குறைந்து 24 கோடியே 87 லட்சமாக ஆனது.
 
மாநகராட்சி சார்பில் 207 அம்மா உணவகங்கள் இயங்கி வரும் நிலையில், சில மாதங்களாக உணவகங்கள் முறையாக செயல்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், முன்னர் போல இல்லாமல் அம்மா உணவகங்களில் சாப்பிடும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது எனவும் தெரிகிறது. 
 
எனவே, நஷ்டத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை மேம்படுத்த அரசு சார்பில் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது.