1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 செப்டம்பர் 2025 (16:25 IST)

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?
அ.தி.மு.க.வில் நீண்ட காலமாக தலைமை பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வருகிற 5ஆம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என்பதில் ஈபிஎஸ் உறுதியாக இருக்கும் நிலையில் இவர்கள் மூவரையும் ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், கடந்த சில நாட்களாகக் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க.வில் தனக்கு அளிக்கப்பட்டு வந்த முக்கியத்துவம் குறைக்கப்பட்டதே அதிருப்திக்கு காரணம் என கூறப்படுகிறது.
 
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமிட்டு வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு தான் செப்டம்பர் 5ல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran