1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (19:02 IST)

ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா? கங்கனா காட்டில் மழை!!!

ஜெயலலிதாவாக நடிக்க இருக்கும் கங்கானாவின் சம்பள விவரம் தற்போது வெளியாகி பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு தமிழ் சினிமா இயக்குநர்கள் தயாராகி வந்தனர் . பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி, விஜய் ஆகியோர் இப்படத்தை எடுக்கத் திட்டமிட்டனர். 
 
ஆனால் கடைசியாக ஏ.எல் விஜய் இப்படத்தை இயக்க முடிவெடுத்து அறிவித்தார். இப்படத்தில் நடிகைகள் தேர்வு நெடுநாட்களாக பேசப்பட்டு வந்தநிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கவிருப்பதாக அவரது பிறந்தநாளன்று அறிவித்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தயாராக இருக்கிறது.
 
இந்நிலையில் இப்படத்தில் நடிக்க கங்கனாவிற்கு ரூ 24 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.