திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 4 நவம்பர் 2022 (15:17 IST)

''செம்மொழித் தமிழ் விருது'' பெற்ற க.நெடுஞ்செழியன் மறைவு - முதல்வர் ஸ்டாலின் மற்றும் சீமான் இரங்கல்

chess stalin
தமிழ்மொழி அறிஞர் பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்கள் உயிரிழப்பிற்கு முதலமைச்சர்  முக.ஸ்டாலின் மற்றும் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் ‘’தமிழ்மொழி அறிஞரும் தமிழின அரிமாவுமான பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்கள் உயிரிழந்ததையடுத்து மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

க.நெடுஞ்செழியன் கடந்த ஆகஸ்ட் தமிழ்மொழி அறிஞரும் தமிழின அரிமாவுமான பேராசிரியர் – முனைவர் அவர்கள் மறைவை அறிந்து மிகமிக வருத்தமடைகிறேன். அவருக்குக் 'கலைஞர் மு.கருணாநிதி மாதம்தான் செம்மொழித் தமிழ் விருதை' நான் வழங்கினேன். சக்கர நாற்காலியில் வந்து அவர் அந்த விருதைப் பெற்றுக் கொண்டார்கள்.
அப்போது உரையாற்றிய நான், "2021-ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெறும் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களின் அறிவுத் திறத்தைச் சொல்வதாக இருந்தால் பல மணி நேரம் ஆகும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் இனமானப்பேராசிரியர் அவர்களும் இன்று இருந்திருந்தால் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்களுக்கு விருது வழங்கும் காட்சியைக் அடைந்திருப்பார்கள்.

கண்டு மகிழ்ச்சி தமிழுக்கும் தமிழினத்துக்கும்திராவிட இயக்கத்துக்கும்தொண்டாற்றுவதற்காகத் தனது வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்டவர்தான் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள் பல்வேறு நூல்களைப் படைத்தவர்.

தந்தை பெரியார் குறித்தும், திராவிட இயக்கம் பற்றியும் தொடர்ந்து எழுதிவருபவர் பேராசிரியர். எழுதுபவர் மட்டுமல்ல, இன உரிமைப் போராளி அவர். அவருக்கு இந்த விருது தரப்பட்டது பெருமைக்குரியது ஆகும்" என்று நான் குறிப்பிட்டேன். அத்தகைய படைப்பாளியாகவும் போராளியாகவும் இருந்தவரைத்தான் இழந்துள்ளோம்’’என்று தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் என்ற கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’தமிழர் மெய்யியல் மற்றும் பண்பாட்டு ஆய்வறிஞர் முனைவர் க.நெடுஞ்செழியன் மறைவு தமிழினத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! ஐயாவின் இறுதி நிகழ்வினை உரிய அரசு மரியாதையுடன் தமிழ்நாடு அரசு நடத்தித்தர வேண்டும்!

அவருடைய மறைவென்பது உலகத் தமிழினத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும். ஈடு செய்யவியலாத பேரிழப்பால் துயருற்றுள்ள அவரதுகுடும்பத்தினருக்கும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கும், தமிழர் மெய்யியல் பற்றாளர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து இப்பெருந்துயரத்தில் பங்கெடுக்கிறேன்.ஐயா முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்களின் இறுதி நிகழ்வினை உரியஅரசு மரியாதையுடன் தமிழ்நாடு அரசு நடத்தித்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.’’ என்று தெரிவித்துள்ளார்.