திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 22 மே 2024 (10:07 IST)

பிரதமர் மோடி அரசியலில் இருந்தே விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

Mallikarjun Kharge
பிரதமர் மோடி அரசியலில் இருந்தும் பொது வாழ்க்கையில் இருந்தும் விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 
 
பிரதமர் மோடியின் நோக்கம் சுத்தமானதாக இல்லை என்றும் இந்து முஸ்லிம் என்று பிரித்து பேசும் அவர் வெறுப்பூட்டும் வகையில் பேசுகிறார் என்றும் இது போன்ற கருத்துக்களை கூறுவதன் மூலம் அவர் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துகிறார் என்றும் தெரிவித்தார் 
 
இந்து முஸ்லிம் என்ற பிரித்து பேசினால் தனக்கு பொது வாழ்க்கையில் தொடரும் உரிமை இல்லை என்று அவரே கூறியதால் அவர் பொது வாழ்க்கையில் இருந்து விலக வேண்டும் என்றும் அரசியல் இருந்து விலக வேண்டும் என்றும் தெரிவித்தார் 
 
குறைந்தபட்சம் அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தனது தவறை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். தேர்தல் பிரச்சாரத்துக்காக பாஜக கோடி கணக்கில் செலவு செய்து வெறுப்பை பரப்புகின்றனர், ஆனால் அன்புக்கான கடையை தான் ராகுல் காந்தி விரித்து உள்ளார் என்றும் அவர் ஒருவரால் மட்டுமே இந்த நாட்டை வழிநடத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran