திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 ஜனவரி 2018 (12:27 IST)

விஜயேந்திரர் ரொம்ப நல்லவர்: தெர்மாக்கோல் புகழ் செல்லூர் ராஜூ அருமையான கருத்து!

நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது காஞ்சி சங்கர மட விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்தார். ஆனால் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மட்டும் எழுந்து நின்றார்.
 
விஜயேந்திரரின் இந்த செயல் தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு உள்ளது.
 
ஆனால் காஞ்சி சங்கர மடம் வெளியிட்ட அறிக்கையில் அவர் அப்போது தியானத்தில் இருந்ததால் எழுந்திருக்கவில்லை என கூறினர். ஆனால் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது ஏன் அவர் தியானத்தில் இருக்கவில்லை என தமிழ் ஆர்வலர்கள் இந்த விளக்கத்துக்கு கொந்தளித்துள்ளனர்.
 
தொடர்ந்து கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் விஜயேந்திரர் தனது செயலுக்கு இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. ஆனால் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ தனது பேட்டியில் விஜயேந்திரர் செய்ததில் தவறு ஏதுமில்லை. அவர் நேர்மையானவர் என அவரது புகழை பாடியுள்ளார்.
 
தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது விஜயேந்திரர் தியானம் தான் மேற்கொண்டார். அவர் தவறு ஏதும் செய்யவில்லை. விஜயேந்திரர் நேர்மையானவர், அனைவரையும் மதிக்கக்கூடியவர் என செல்லூர் ராஜூ அருமையான தனது கருத்துக்களை உதிர்த்துள்ளார்.