புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 ஜனவரி 2018 (12:12 IST)

திருமணமான முன்னாள் காதலியை நண்பருடன் சேர்ந்து கற்பழித்த வாலிபர் - சென்னையில் அதிர்ச்சி

வேறு ஒருவரை திருமணம் செய்ததால் ஆத்திரம் கொண்ட நபர் ஒருவர் தனது முன்னாள் காதலியை காரில் வைத்து நண்பருடன் சேர்ந்து கற்பழித்த விவகாரம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
குன்றத்தூருக்கு அடுத்துள்ள வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் நேற்று இரவு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலை ஓரமாக, விளக்கு எதுவும் எரியாமல் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரின் அருகே சென்று பார்த்தனர். அப்போது, காரின் உள்ளே ஒரு இளம்பெண் ஆடை கிழிந்த நிலையில் அழுது கொண்டிருந்துள்ளார். மேலும், அவரின் அருகே இரு வாலிபர்கள் சிரித்த நிலையில் இருந்துள்ளனர்.
 
போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும், அந்த பெண் மற்றும் வாலிபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார்  விசாரணை செய்தனர்.  அதில் வெளிவந்த செய்தியாவது:
 
அம்பத்குமார் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார்(30). கால் டாக்சி ஓட்டுனராக பணிபுரியும் இவர், திருவள்ளூரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், சூழ்நிலை காரணமாக அப்பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்து முடிந்து விட்டது.
 
இதனால் ஆத்திரமடைந்த அசோக்குமார் அப்பெண்ணை பழிவாங்க திட்டமிட்டார். இருவரும் காதலித்த போது எடுத்த புகைப்படங்கள் தன்னுடைய நண்பன் ஒருவனிடம் இருப்பதாகவும், அந்தப்பெண் வந்தால்தான் அதை அவர் தருவேன் என்கிறார் எனக்கூறி அப்பெண்ணை நேற்று இரவு வரவழைத்துள்ளார். அவரை காரில் ஏற்றி வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் சென்று காரை நிறுத்தி விட்டு பலவந்தமாக அப்பென்ணை கற்பழித்துள்ளார்.
 
இரவு நேரம் என்பதாலும், காரின் கதவுகள் மூடப்பட்டிருந்தாலும், அப்பெண்ணின் அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை.  அதன் பின், தனது நண்பர் அன்பரசுக்கும் அப்பெண்ணை விருந்தாக்கியுள்ளார். மேலும், ஒருவர் கற்பழிக்கும் போது மற்றொருவர் அதை வீடியோவும் எடுத்துள்ளனர். இருவரும் கற்பழித்ததால் அப்பெண் காரிலேயே அழுத வண்ணம் இருந்துள்ளார். அப்போதுதான் அவர்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
 
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.