திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (18:22 IST)

சசிகலா விடுதலை அதிமுகவிற்கு பலம்: டிவிஸ்ட் அடிக்கும் அமைச்சர்!

சசிகலா வெளியே வந்தாலும் அதிமுக மிகப்பெரிய வலுப்பெரும் என செல்லூர் ராஜு கருந்து. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக பல குழப்பங்களை சந்தித்து இப்போது ஒரு வழியாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையின் கீழ செயல்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் இன்னும் 7 மாதத்தில் தமிழகத்துக்கு சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே கேள்வியை அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது ‘அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவரே முதல்வர் வேட்பாளர் எனக் கூறியுள்ளார். 
 
அதோடு, பாஜக நயினார் நகேந்திரன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம். சசிகலா பற்றி எங்களுக்கு கவலையில்லை, சசிகலா வெளியே வந்தாலும் அதிமுக மிகப்பெரிய வலுப்பெரும், சட்டமன்ற தேர்தலில் அதிமுக புயல் வேகத்தில் சென்றுக்கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.