தொடர்புடைய செய்திகள்
- 22 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! இந்திய நிலவரம்!
- குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று..!
- ஓரினச்சேர்க்கையாளர்களை பற்றி படம் எடுக்கும் ராம்கோபால் வர்மா! வெளியானது போஸ்டர்!
- சஹாலின் வருங்கால மனைவி யார் தெரியுமா? இன்ஸ்டாகிராமில் பற்றிக்கொண்ட காதல்!
- சிபிஐ கொடுக்காத தண்டனையை கொடுத்த கொரோனா: சாத்தான்குளம் பால்துரை மரணம்!
2021 தேர்தலில் அதிமுக வேட்பாளர் யார்? செல்லூர் ராஜு பதில்!
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக பல குழப்பங்களை சந்தித்து இப்போது ஒரு வழியாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையின் கீழ செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்னும் 7 மாதத்தில் தமிழகத்துக்கு சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதே கேள்வியை அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது ‘இப்போது அதிமுகவை இரு தலைவர்கள் வழிநடத்துகிறார்கள். அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவரே முதல்வர் வேட்பாளர். ’ எனக் கூறியுள்ளார். அதனால் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் தேர்தல் சமயத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
