திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2024 (10:55 IST)

உலக நாயகனாக இருந்த கமல்ஹாசன், சிரிப்பு நடிகராக மாறிவிட்டார்: செல்லூர் ராஜூ

சினிமாவில் உலகநாயகனாக இருந்த கமல்ஹாசன் அரசியலில் சிரிப்பு நடிகராக மாறிவிட்டார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை திமுக கூட்டணியில் இணைத்துவிட்டார் என்பதும் அதற்கு பதிலாக அவர் ஒரே ஒரு ராஜ்யசபா தொகுதியை மற்றும் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் ஒரு ராஜ்யசபா சீட்டு கேட்டால் காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் கொடுக்க தயாராக இருக்கும்போது ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக எதற்காக கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற விமர்சனம் அவர் மீது எழுந்துள்ளது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு  இதுகுறித்து கூறிய போது சினிமாவில் கமல்ஹாசன் உலகநாயகனாக இருந்தாலும் அரசியலில் அவர் பூஜ்ஜியம் என்பதை அவரது செயல் நிரூபித்து விட்டது

சிரிப்பு நடிகர் வடிவேலுவை காட்டிலும் சிரிப்பு நடிகராக அரசியலில் அவர் மாறிவிட்டார். வாயை வாடகைக்கு விட்டிருந்தால்கூட ஒரு தொகுதியையாவது வென்று இருக்கலாம். ஆனால் இந்த பொழப்புக்கு அவர் இன்னும் இரண்டு படத்தில் நடித்திருக்கலாம் என்று செல்லூர் ராஜூ கடும் விமர்சனம் செய்துள்ளார்

செல்லூர் ராஜுவின் இந்த விமர்சனத்திற்கு மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Edited by Mahendran