தொடர்புடைய செய்திகள்
- ஓரினச்சேர்க்கையாளர்களை பற்றி படம் எடுக்கும் ராம்கோபால் வர்மா! வெளியானது போஸ்டர்!
- சிபிஐ கொடுக்காத தண்டனையை கொடுத்த கொரோனா: சாத்தான்குளம் பால்துரை மரணம்!
- திருமணத்தில் கலந்துகொண்டவருக்கு கொரோனா? அதிர்ச்சியில் நடிகர்!
- கடைசி இரண்டு டெஸ்ட்களில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல் –அதிர்ச்சியில் இங்கிலாந்து ரசிகர்கள்!
- சேப்பாக்கம் மைதானத்தில் தோனி படை – அமீரகம் செல்வதற்கு முன் சென்னையில் பயிற்சி!
குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று..!
குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று..!
கடந்த சில நாட்களாகவே தினந்தோறும் கொரோனா வைரஸால் சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டு வருவது குறித்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நேற்று கூட இரண்டு அதிமுக எம்எல்ஏக்கள் கொரனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்றும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரனோ வைரஸ் தொற்று ஒரு செய்யப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராமர் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக கொரனோ தொற்று அறிகுறி இருந்ததாகவும் இதனையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் சற்றுமுன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட குளித்தலை திமுக எம்எல்ஏ ராமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே திமுக, அதிமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், தமிழக கவர்னர் என முக்கிய பதவியில் இருப்பவர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
