1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 18 செப்டம்பர் 2023 (15:10 IST)

எனக்கு மலைபோல் அவர் இருக்கிறார், எந்த மனவருத்தமும் இல்லை: சீமான் மனைவி பேட்டி..!

எனக்கு மலை போல் என் கணவர் இருக்கும்போது எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை என சீமான் மனைவி கயல்விழி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். 
 
விஜயலட்சுமி விவகாரம் குறித்து உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டதா என்று கேட்டபோது எனக்கு எந்த மன அழுத்தமும் இல்லை, என் கணவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும், எனக்கு மலை போல் அவர் இருக்கும் போது எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை, எனக்கு ஆறுதல் சொல்ல வந்தவர்களிடம் கூட நான் இதைத்தான் சொன்னேன், எனக்கு ஆறுதல் யாரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, எனக்கு அவரைப் பற்றி நன்றாக தெரியும் என்று சொன்னேன் என்று கூறினார் 
 
 சீமான் மீது பாலியல் புகார் கூறிய நடிகை விஜயலட்சுமி  தனது புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டதை அடுத்து இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததாகவே கருதப்படுகிறது.
 
Edited by Siva