வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 19 நவம்பர் 2020 (12:47 IST)

எனக்காக வேல் யாத்திரை நடத்தும் பாஜக: சீமான் ட்விஸ்ட்!

நாம் தமிழக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவின் வேல யாத்திரை குறித்து பேசியுள்ளார். 
 
தமிழகத்தில் கடந்த நவம்பர் 6 வேல் யாத்திரை தொடங்கிய நிலையில் தமிழக அரசு தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதாக பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் வேல் யாத்திரை திட்டமிட்டப்படி நடக்கும் என்றும் நவம்பர் 17 முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடங்கும் என்றும் பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். 
 
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாம் தமிழக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவினர் என்னதான் யாத்திரை நடத்தினாலும் அதனால் எங்களுக்குதான் நன்மையே ஒழிய நாந்தான் வளருவேனே ஒழிய அவர்களுக்கு ஒரு பலனும் கிடைக்கபோவதில்லை. கஷ்டப்பட்டு வேல் யாத்திரையை நடத்தி பாஜக நாம் தமிழரை வளர்க்கிறது என கூறியுள்ளார்.