திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2017 (16:30 IST)

ஆளாப்போறான் தமிழன் ; நான் சொன்னா கேட்கல..விஜய் சொன்னா கேட்பீங்க - பொங்கும் சீமான்

மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் பாடலைக் கேட்டால் என்னை எதிர்த்தவர்களுக்கு என்னுடைய முகம்தான் நினைவுக்கு வரும் என நாம் தமிழர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் விஜய் நடித்து, தீபாவளிக்கு வெளியான மெர்சல் படம், பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக வள்ளியூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 
 
தமிழன்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என நான் 8 வருடங்களாக கூறி வருகிறேன். ஆனால், சினிமாவில் கூறினால் மக்கள் அதை கொண்டாடுகிறார்கள். இதையே நான் கூறியபோது என்னை எல்லோரும் கேலி செய்தனர். ஆனால், இந்த பாடலுக்கு பின் ஆளப்போறான் தமிழன் என கூறத்தொடங்கியுள்ளனர். இந்த பாடலை கேட்டால் என்னை எதிர்த்தவர்களுக்கு என்னுடைய முகம்தான் நினைவுக்கு வரும்” என அவர் பேசினார்.