ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 28 அக்டோபர் 2017 (19:04 IST)

மெர்சல்' பட பாணியில் கமிஷன் பேசிய புரோக்கர் கைது

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் மருத்துவமனை புரோக்கர் ஒருவர் கமிஷன் பேசிய காட்சி இடம்பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. இதேபோல் நிஜத்தில் கமிஷன் பேசிய புரோக்கர் ஒருவர் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்



 

 
கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் சந்திரசேகர் சமீபத்தில் விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை அணுகிய ஜான் என்ற புரோக்கர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் இன்சூரன்ஸ் கிடைப்பதோடு, விரைவில் குணமாகலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். 
 
அப்போது அங்கு வந்த அரசு மருத்துவர் ஜானை கண்டித்ததாகவும், இதற்கு ஜான் மருத்துவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அரசு மருத்துவர் கொடுத்த புகாரை அடுத்து ஜான் கைது செய்யப்பட்டுள்ளார். ஜானுக்கு பின்புலமாக அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், காவல்துறையினர்களும் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது