புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 19 நவம்பர் 2018 (08:54 IST)

வாயில சிகரெட்ட வெச்சிட்டு நீ என்னத்த நல்லத சொல்ற: விஜய்யை வாரிய சீமான்

நடிகர் விஜய் சர்கார் படத்தில் புகை பிடிப்பது போல் உள்ள காட்சிகளை தவிர்த்திருக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் வெளியான சர்கார் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. பின்னர் ஒரு சிலரின் மிரட்டலுக்கு பயந்துபோன படக்குழுவினர் படத்தில் இருந்து சர்ச்சைக் காட்சிகளை நீக்கினர்.
 
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே பல விமர்சனக்கள் எழுந்தது. விஜய் புகை பிடிப்பது போல் உள்ள காட்சிகள் தவறு என்று அன்புமணி தெரிவித்தார். இதற்கு விஜய் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் படத்தில் பல இடங்களில் விஜய் புகை பிடிப்பது போல காட்சிகள் இருந்தது.
 
இந்நிலையில் சர்கார் படத்தில் புகை பிடித்ததற்காக கேரளாவில் விஜய்க்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், படத்தில் விஜய் புகைப்பது போல் உள்ள காட்சி தவறானது என்றார்.  வாயில சிகரெட்ட வெச்சிட்டு நீ என்னத்த நல்லத சொல்லிடப்போற. கேரளாவில் விஜய் மீது வழக்கு பதியப்பட்டது சரியே. இனியாவது விஜய் இந்த மாதிரி காட்சிகளை தவிர்ப்பது என சீமான் தெரிவித்துள்ளார்.