செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (07:49 IST)

ரௌடியா டா நீ? நடிகர் விஜய்யை விளாசிய பிரபல எழுத்தாளர்

பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா சர்கார் படத்தில் நடித்த நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் இருந்த சில வசனங்கள் ஆளும் அதிமுகவை விமர்சிக்கும் வகையில் இருந்தது இதைத் தொடர்ந்து அதிமுகவினர் விஜய் ரசிகர்கள் வைத்த சர்கார் படத்தின் பேனரை கிழித்தும், சர்கார் படம் ஓடும் தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டியும் ரௌடிதனம் பண்ணினர்.
 
மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் விதமாக ஒருபுறம் படத்தில் வீரவசனம் பேசி ஒரு வாரத்தில் நன்றாக கலெக்‌ஷன் அள்ளிவிட்டனர் படக்குழுவினர். பின்னர் அதிமுகவினரின் மிரட்டலுக்கு அடிபணிந்து படத்திலிருந்த சர்ச்சைக் காட்சிகளை நீக்கிவிட்டனர் படக்குழுவினர்.
 
இந்நிலையில் சர்கார் படம் குறித்து பேசிய பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா, படத்தில் ரௌடி தனத்தை பண்ணின விஜய், மக்களை தூண்டுகிறார். அரசியலுக்கு வருகிறாய் என்றால், மக்களுக்கு நல்லது செய்து, உன் கொள்கைகளை மக்களிடத்தில் சொல்லு. அதை விட்டுவிட்டு வில்லன் ரௌடிதனம் பண்ணினால் நீயும் ரௌடி தனம் பண்ணுற. இதுதான் நீ மக்களுக்கும் ரசிகர்களுக்கும் சொல்ற கருத்தா?
 
நீ படத்துல இலவசங்கள தூக்கி எரியுற, அதுனால அவுங்க உன் பேனர கிழிக்கிறாங்க.. நீ ரௌடி தனம் பண்ற, பதிலுக்கு அவுங்களும் ரவுடி தனம் பண்ணுறாங்க.. இதுதான் நீ மக்களுக்கு சொல்ற நல்லதா என விஜய்யையும், படக்குழுவினரையும் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார் சாருநிவேதிதா.