வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (19:55 IST)

இரண்டு மாத மின்கட்டணம் விலக்கு அளிக்க வேண்டும்: சீமான் கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இரண்டு மாதங்கள் மின் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் 
 
ஊரடங்கு ஏற்படுத்தி இருக்கும் பொருளாதார முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதிலிருந்து இரண்டு மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார் 
 
அன்றாடம் வேலைக்கு சென்று கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொண்டு சாரா தொழிலாளர்கள் தினக்கூலிகள் தெரு வியாபாரிகள் போன்ற எளிய மக்கள் கடந்த இரண்டு மாத காலமாக எவ்வித வருமானமும் இன்றி வீட்டு வாடகை உணவு குடிநீர் மருத்துவம் முதலியை அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர் 
 
இந்த நெருக்கடியான பேரிடர் காலத்தில் அவர்களுக்கு உறுதுணையாய் நின்று அவர்களின் துயர் போக்க உதவிகளை பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாய கடமை என்றும் சீமான் தெரிவித்துள்ளார்