புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (07:57 IST)

வாடகை கொடுக்காததால் 48 தமிழ் குடும்பங்களை விரட்டியடித்த வீட்டு ஓனர்கள்: கேரளாவில் பரபரப்பு

48 தமிழ் குடும்பங்களை விரட்டியடித்த வீட்டு ஓனர்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து மே 3ஆம் தேதி வரை ஏழை எளிய மக்கள் வேலையின்றி வருமானமின்றி பசியும் பட்டினியுமாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் பலர் வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழகம் உட்பட பல மாநில முதல்வர்கள் மார்ச் மாத வாடகையை வாங்க வேண்டாம் என வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துயுள்ளனர். ஒருசில மாநிலங்கள் அரசே வீட்டு வாடகையை தந்துவிடுவதாகவும் கூறியிருந்தன. இதையும் மீறி வீட்டை காலி செய்யச் சொல்லி வற்புறுத்தினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில அரசுகள் தெரிவித்திருந்தன.
 
இந்த நிலையில் கேரள மாநிலத்திலுள்ள கொள்வாயலல் என்ற பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 48 தமிழ் குடும்பங்கள் வாடகைக்கு தங்கியிருந்தனர். இவர்கள் மரம் அறுக்கும் வேலை செய்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்களுக்கு வேலை இல்லாமல் இருந்தது. இதனால் வருமானம் இன்றி இருக்கும் இவர்களால் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் வாடகை கொடுக்க முடியவில்லை 
 
இதனை அடுத்து அந்த அப்பார்ட்மெண்டில் உரிமையாளர் திடீரென வந்து வாடகை கொடுக்காத 48 தமிழ் குடும்பங்களை அதிரடியாக வெளியேற்றினார். ஒரு சிலரின் வீடுகளுக்குள் புகுந்து பாத்திரங்களை எல்லாம் எடுத்து வெளியே வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தமிழக முதல்வர், கேரள முதல்வரிடம் பேசி வீட்டை வலுக்கட்டாயமாக காலி செய்ய செய்த வீட்டு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.