வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 ஜூன் 2019 (08:39 IST)

இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் கமல்-சீமான்: அமைச்சர் குற்றச்சாட்டு

கமல், சீமான் இருவரும் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டிவிடுவதாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
 
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பகுதியை அடுத்த மஹேந்திராசிட்டி பகுதியில் சுற்றுசூழல் குறித்து தனியார் நிறுவனங்கள் நிர்வாகிகளுடன் அமைச்சர் கருப்பண்ணன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, 'சீமான், கமல் ஆகியோர் தமிழக அரசு மீது கூறிய குற்றச்சாட்டுக்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, 'சீமான், கமல் இருவரும் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டிவிடுகின்றனர். அவர்களுடைய படங்களிலும் சரி, அரசியல் வாழ்க்கையிலும் சரி வன்முறையே அதிகம் இருக்கும். 
 
இளைஞர்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக்கொடுத்தால் தான் அவர்கள் நல்ல முறையில் வளர்ந்து வருவார்கள். ஆனால் சீமான், கமல் அவர்களுக்கு நல்ல விஷயத்தை கற்றுத்தராமல், போராட்டம் செய்யவும், வன்முறையை தூண்டவும் செய்து வருகின்றனர். சீமான், கமல் இருவரும் இதுவரை நாட்டிற்கு என்ன நல்லது செய்துளார்கள்? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் கருப்பண்ணன், இதுவரை நாட்டிற்கு பயனுள்ள திட்டங்கள் ஏதாவது இருவரும் சொல்லி இருக்கின்றார்களா? என்றும் கேள் எழுப்பினார்
 
மேலும்  ஆளும் கட்சியினருக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், ஆனால்  அவற்றெல்லாம் அதிமுக அரசு முறியடித்து மக்களுக்கு தேவையானவற்றை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்தார்.