செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 27 அக்டோபர் 2018 (17:07 IST)

சீமான் அண்ணா AK 74 எடுத்துட்டு வரவும்: சிக்கலிலும் நக்கல்!

இலங்கையில் நடந்து வரும் அரசியல் பரமபத விளையாட்டுகளால் அங்கு அடுத்து என்ன மாதிரியான சூழ்நிலை வரப்ப்போகிறது என கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. 
 
இலங்கையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ராஜபக்சே நேற்று திடீரென அந்நாட்டின் பிரதமராக பதவியேற்று கொண்டார். 
 
அதிபர் சிறிசேனா தனது ஆட்சியை காப்பாற்றி கொள்ளவே பிரதமராக இருந்த ரணிலை நீக்கிவிட்டு, ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவியை அளித்துள்ளதாக இலங்கை ஊடகங்கள் விமர்சனம் செய்து வருகின்றன.
 
இந்நிலையில், திமுகவை சேர்ந்த தமிழன் பிரசன்னா ராஜபக்சேவின் பதவியேற்பை கிண்டல் செய்து பதவிட்டுள்ளார். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானையும் சீண்டியுள்ளார். 
 
அதாவது, ராஜபக்சேவின் புகைப்படத்தை வெளியிட்டு, அண்ணன் சீமான் எங்கு இருந்தாலும் உடனே AK-74யை எடுத்துக்கொண்டு மேடைக்கு (ஈழத்திற்கு) வரவும்... என பதிவிட்டுள்ளார். 
 
இலங்கையில் நடந்து வரும் சிக்கல்களுக்கு இடையில் சீமானை வைத்து இந்த நக்கல் தேவையா எனவும், இதற்கு கிண்டலாக பல கருத்துக்களையும் இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.