திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 நவம்பர் 2019 (15:21 IST)

யாரும் இல்லாத போது சண்டைக்கு வருவது வீரம் இல்லை – ரஜினியின் அரசியல் வருகை பற்றி சீமான் !

தமிழகத்தில் அரசியலில் வெற்றிடம் இருப்பதானாலேயே ரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்துள்ளனர் என சீமான் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பின் கமல் அரசியல் கட்சி தொடங்கிய்டுள்ளார். ரஜினி விரைவில் தொடங்க இருக்கிறார்.இந்நிலையில் ரஜினி தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவருக்கான வெற்றிடம் உள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து அவரை பலரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இது சம்மந்தமாகப் பேசிய ‘வயதானதால் படங்கள்  இல்லாததால் நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர்.’ எனக் கூறினார். இதையடுத்து இதுகுறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் ‘கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும்போதே அரசியலில் தான் ஒரு மாற்றாக வருவேன் என விஜயகாந்த் சொன்னார். அதற்குத் துணிவு வேண்டும். நாம் தமிழர் கட்சி, இரு ஆளுமைகளும் இருக்கும்போதே எதிர்த்து அரசியல் செய்தது. இப்போது யாரும் இல்லாத இடத்தில் சண்டைக்கு அழைப்பது எப்படி வீரமா? வெற்றிடம் இல்லையென்றால் ரஜினி அரசியலுக்கு வந்திருக்க மாட்டார்.’ எனத் தெரிவித்துள்ளார்.