Daily Horoscope
✕

உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? டிடிவி தினகரனுக்கு சீமான் கேள்வி

Written By Mahendran
Updated: திங்கள், 1 ஏப்ரல் 2024 (12:58 IST)
உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? எம டிடிவி தினகரனுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இன்று தேர்தல் பிரச்சாரத்தின்போது டிடிவி தினகரனுக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
சசிகலாவை நான்கரை ஆண்டுகள் சிறையில் வைத்தவர்கள் யார்? சசிகலா பதவியேற்பதை தடுக்க 22 நாட்கள் தாமதப்படுத்தியது யார்? சசிகலா வழக்கை அவசர அவசரமாக விசாரித்து தண்டனை வழங்கியது யார்?
 
பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு சசிகலா கூறியவுடன் அவசரமாக விசாரிக்க சொன்னது யார்? சசிகலா குடும்பத்தில் நிகழ்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் பாஜக தான். டிடிவி தினகரன், சசிகலா பிரச்சினையில் இருந்த போது தமிழகத்தில் குரல் கொடுத்த ஒரே ஆள் நான்
 
இரட்டை இலை சின்ன வழக்கில் கைதானவர் இன்னும் சிறையில் இருக்கிறார். என்னை மிரட்டி பார்த்தார்கள், நான் சமரசம் ஆகவில்லை, சரணடையவில்லை என்று சீமான் பேசினார்.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

விமானிக்கு கத்திக்குத்து விவகாரம்!.. Fly Dubai விமான சேவை ரத்து!.. தீவிரமடையும் விசாரணை!.

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவு.. கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கம்..

அருகதையில்லை!.. ஆதவ் அர்ஜுனா பேசுறத நிறுத்திக்கோங்க!.. பிரேமலதா கோபம்!...

ஓபிஎஸ் மாதிரியே குஜராத்திலும் ஒருவர்.. கட்சி மாறிய முன்னாள் முதல்வர்...

அம்மா சத்தியமா சத்தியபாமா காதுல இதத்தான் சொன்னேன்!. ராஜ்மோகன் விளக்கம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments