108 ஆடுகள் வெட்டி மகனுக்குக் காதுகுத்திய சீமான்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மகனுக்கு சமீபத்தில் முடிகாணிக்கை செய்து காதுகுத்தியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கயல்விழி தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு மாவீரன் பிரபாகரன் எனப் பெயர் சூட்டினார் சீமான். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குல தெய்வக் கோயிலில் குழந்தைக்கு சில நாட்களுக்கு முன்னர் முடியிறக்கி மொட்டை அடிக்கப்பட்டது. அப்போது காணிக்கையாக 108 ஆடுகள் வெட்டப்பட்டுள்ளன.