வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (16:07 IST)

சீமான் மீது நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் குற்றம்சாட்டு

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள தேதியை இம்மாதம் இறுதியில் அறிவிகவுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலுக்கு பிரசாரத்தில் ஈடுப்பட்டு வரும் கட்சிகள் மேலும் தங்கள் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக் கூறியுள்ள நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான், முதன் முதலில் தன் கட்சியின் சார்பில் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில், இன்று அவரது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த  சுமார் 300 பேர் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியி இணைந்தனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மீது அக்கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

அதில், சீமான் தம்பி என அழைப்பதும் சமத்துவம் பேசுவதும் போலி! சீமான் ஜனநாயகமின்றிச் செயல்பட்டுவருகிறார்….என்று திமுகவில் இணைந்த அவர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளனர்.

மேலும், சமீபத்தில்சீமான் கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்க எனக்கு முழு உரிமை உண்டு எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.