புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 11 பிப்ரவரி 2019 (21:09 IST)

தேர்தல் வேண்டாம்; 10-த்த நீங்க வச்சிகோங்க... பாஜக - அதிமுக டீலிங்..?

என்னத்தான் பாஜகவும் அதிமுகவும் கூட்டணி குறித்து வெளிப்படையான தகவல்களை வெளியிடாவிட்டாலும், மறைமுகமாக கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
அந்த வகையில் இந்த கூட்டணி பேச்சு வார்த்தையில், பாஜக 10 தொகுதிகளும் மேல் வேண்டும் என கோரிக்கை முன்வைக்கிறதாம். இதற்கு அதிமுக, 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளை தருகிறோம். ஆனால், 21 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலோடு நடக்க கூடாது என கேட்டுக்கொண்டுள்ளதகா தகவல் தெரிவிக்கின்றன. 
 
ஏற்கனவே, திமுக தலைவர் ஸ்டாலின் 21 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்தாமல் ஒத்திப்போடுவது, அதிமுக - பாஜக கூட்டணி பேரத்தால்தான் என கூறி வரும் நிலையில், இப்போது வெளியாகியுள்ள தகவல் இதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. 
 
ஆனால், இந்த மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கெல்லாம் வேட்டு வைக்கும் வகையில், பொதுக்கூட்டம் முதல் நாடாளுமன்றம் வரையில் பாஜவுக்கு எதிராக பேசிக்கொண்டிருக்கிறார் நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை.